×

மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:  ஆன்லைன் வகுப்பில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை கே.கே.நகரில் உள்ள பள்ளி  ஆசிரியர் ராஜகோபாலன், அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது  செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.  இந்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுதலை செய்யக் கோரி ராஜகோபாலனின்  மனைவி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்  செய்தார். அதில், கடந்த 2015ம் ஆண்டு  நடந்த சம்பவம் தொடர்பாக  அளித்த புகாரின் அடிப்படையில் எனது கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. அப்போது, ஆன்லைன் வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை.தாமதமாக  அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலின்  அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டு உள்ளது. எந்த ஆதாரங்களும், அடிப்படையும்  இல்லாமல் கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர் என்று  கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்  மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு, சம்பவம் நடந்தபோது ஆன்லைன்  வகுப்புகள் இல்லை என்பதை கருத்தில் கொள்ளாமல், குண்டர் சட்டத்தின் கீழ்  சிறையில் அடைத்துள்ளனர். குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பதற்கான காரணங்களை,  குறித்த காலத்தில் வழங்கவில்லை. எனவே, ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில்  சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது….

The post மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Rajagopalan ,KK Nagar ,Ashok Nagar ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...