- திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- மணப்பத்தூர் கிராமம்
- அரியலூர்
- திரௌபதி அம்மன் கோவில்
- செந்துறை
- அரியலூர் மாவட்டம்
- தீ மிதி திருவிழா
- தீமிதி
- சரோட் விழா
- Draupadi
- அம்மன் கோயில்…
- தின மலர்
அரியலூர், மார்ச் 29: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மணப்புத்தூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கிராமத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திரவுபதி அம்மன் கோயில் தீமிதி மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு முன்னதாகவே காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இன்ற தீமிதி திருவிழாவை ஒட்டி, திரவுபதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக, பம்பை உடுக்கை முழக்கத்துடன் சக்தி அழைத்து பூங்கரகம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து திரவுபதி அம்மன் கோயில் அருகே 23 அடி நீளத்தில் மூட்டப்பட்டிருந்த தீக்குழியில் காப்பு கட்டிய பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதேபோல் பிறந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் இல்லாமல் இருப்பதற்காக சில பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். மணப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் திருவிழாவிற்கு, குவாகம் காவல்துறை காவலர்கள் செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post மணப்பத்தூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.
