×

100 திறமையான இளங்கலை மாணவர்களுக்கு உலகளாவிய தொழில் பயிற்சி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஷெல் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பங்களிப்புடன் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மின் வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சிகள் வழங்க உயர்திறன் மையங்கள் நிறுவப்படும். நான் முதல்வனின் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் 100 திறமையான இளங்கலை மாணவர்களுக்கு உலகளாவிய தொழில் பயிற்சி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சி ஏற்படுத்தும் வகையில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 11 பல்கலைக்கழகங்களில் நான் முதல்வன் பல்கலைக்கழக செயல் மையங்கள் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். நான் முதல்வன் பாடத்திட்ட சீரமைப்பு பிரிவு மற்றும் மதிப்பீடு பிரிவு ரூபாய் 1.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

* தொல்லியல் ஆய்வை நவீனப்படுத்த ரூ.2 கோடி
திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ெவளியிட்ட அறிவிப்பு: மாநில திட்டக்குழுவால் கொள்கை மற்றும் ஆளுகைக்கான அனுபவ மையம் அமைக்கப்படும். அரசு துறையில் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கை வகுக்கும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பொருளியல் மற்றும் புள்ளியியல் பிரிவு அமைக்கப்படும்.

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் தலைமை இடத்தில் சிறப்பு தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்று அமைக்கப்படும். தொல்லியல் மற்றும் புள்ளியல் துறையின் ஆய்வு முறைகள் ரூ.2 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும். பொருளியல் மற்றும் புள்ளியல் துறை மேம்பாட்டிற்காக பணியாளர்களுக்கு திறன் பயிற்சி ரூ.2.70 கோடி செலவில் அளிக்கப்படும் என்றார்.

The post 100 திறமையான இளங்கலை மாணவர்களுக்கு உலகளாவிய தொழில் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Deputy Principal Assistant Secretary ,Stalin ,Tamil Nadu ,Shell ,Microsoft ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...