×

பாஜ எம்பிக்கள் முழக்கம் வீடு தாக்கப்பட்டது குறித்து பேச சமாஜ்வாடி எம்பிக்கு அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: ராஜபுத்திர மன்னர் ராணா சங்கா குறித்து சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம்ஜி லால் சுமன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவரது வீட்டின் மீது கர்னி சேனா உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று இது பற்றி பேசுவதற்காக ராம்ஜி லால் சுமன் எழுந்தார். அப்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பாஜ எம்பிக்கள் ராம்ஜி லாலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மதியம் 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியவுடன் ராம்ஜி மீண்டும் எழுந்து தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு கோரினார்.
அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

The post பாஜ எம்பிக்கள் முழக்கம் வீடு தாக்கப்பட்டது குறித்து பேச சமாஜ்வாடி எம்பிக்கு அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Samajwadi ,BJP ,New Delhi ,Samajwadi Party ,Ramji Lal Suman ,Rajput ,Rana Sanga ,Karni Sena ,Rajya Sabha ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...