×

போதைப்பொருளை சமாளிக்க மோடிஅரசு தயாராக இல்லை: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: இந்திய இளைஞர்கள் போதைப்பொருளுக்கு இரையாகி வருகின்றனர். இந்தியாவில் 2.3 கோடி ஓபியாய்டு மற்றும் 1 கோடி போதைப்புகைப்பழக்கம் உள்ளவர் உள்ளனர். இது அரியானாவின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். ஒரு முழு தலைமுறையையே அழிக்க அச்சுறுத்தும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள மோடி அரசு விரும்பவில்லை அல்லது முடியவில்லை. போதையை நோக்கி நமது இளைஞர்களைத் தூண்டும் வேலையின்மை போன்ற பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

The post போதைப்பொருளை சமாளிக்க மோடிஅரசு தயாராக இல்லை: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Rahul ,New Delhi ,Lok Sabha ,Rahul Gandhi ,X-Salaat ,India ,Haryana.… ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...