- மதுக்கூர், முத்துப்பேட்டை
- பட்டுக்கோட்டை
- பிரதேச
- அஞ்சல்
- கண்காணிப்பாளரை
- ரகுராமகிருஷ்ணன்
- திருச்சி மத்திய மண்டல தபால் அலுவலகம்
- ஆதார்
- தின மலர்
பட்டுக்கோட்டை, மார்ச்28: பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர்ரகுராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அறிவுறுத்தலின்பேரில் மதுக்கூர் முத்துப்பேட்டை துணை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம்.
அதே போல் பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50. பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூபாய் 100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சிறப்பு முகாம் வாய்ப்பினை பயன் படுத்தி தகுந்த ஆவணங்களை கொ ண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post மதுக்கூர், முத்துப்பேட்டை துணை அஞ்சலகங்களில் ஏப்-முதல் வாரம்: ஆதார் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.