×

அரியானாவில் ரமலான் விடுமுறை திடீர் ரத்து: பாஜ அரசு நடவடிக்கை

புதுடெல்லி: அரியானா அரசின் விடுமுறைப் பட்டியலில் இருந்து ரமலான் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ ஆளும் அரியானா மாநிலத்தில் அரசு விடுறை பட்டியலில் இருந்து ரமலான் பண்டிகை விடுமுறை திடீரென நீக்கப்பட்டுள்து.

முதல்வர் நயாப் சிங் சைனியின் பாஜ அரசால் இந்த உத்தரவு உடனடியாக நடப்பு ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. புதிய உத்தரவு அடிப்படையில் ரமலான் விடுமுறை அரசு விடுமுறைக்கு பதிலாக அட்டவணை-2 இன் கீழ் வரையறுக்கப்பட்ட விடுமுறையாக மாற்றி அரியானா அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவின் படி, ரமலான் பண்டிகை தினத்தில் விடுப்பு எடுக்க விரும்புவோர் மட்டும் அதனை எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்கள் விடுப்பு எடுக்காமலும் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அரியானாவில் ரமலான் விடுமுறை திடீர் ரத்து: பாஜ அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Haryana ,BJP government ,New Delhi ,Haryana government ,BJP ,Chief Minister… ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...