×

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் அதிதி சிங்கை பாஜக களமிறக்கியது ஏன்?.. உத்தரபிரதேச தேர்தல் களத்தில் பரபரப்பு

லக்னோ: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அதிதி சிங்கை பாஜக தலைமை களமிறக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆளும் பாஜக கடந்த ஜனவரி 15ம் தேதியன்று 107 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நேற்று முன்தினம் 85 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உத்தரபிரதேசத்தின் முக்கியமான தொகுதியாக விளங்கிவரும் ரேபரேலி சட்டப்பேரவை தொகுதியில்  காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் அகிலேஷ் குமார் சிங்கின் மகளான சிட்டிங் எம்எல்ஏ அதிதி சிங் மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால், இவர் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதனால், ரே பரேலியின் அரசியல் கள முகமும் மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதிதி  சிங்கை பாஜகவில் ரே பரேலியில் நிறுத்துவது காங்கிரஸ் கோட்டையை புரட்ட  உதவும் என்று ஆளும் பாஜக நம்புகிறது. கடந்த ஆறு தேர்தல்களில் காங்கிரஸ் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. 2007 மற்றும் 2012ல் அது தோல்வியடைந்த இரண்டு முறை, அப்போது வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் குமார் சிங் நான்காவது மற்றும் ஐந்தாவது தேர்தல்களில் வெற்றி பெற்றார். ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியானது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். 1980ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே (விதிவிலக்குகள் 1996 மற்றும் 1998ல், பாஜகவின் அசோக் சிங் வெற்றி) வாக்களித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் அதிதி சிங்கை பாஜக களமிறக்கியது ஏன்?.. உத்தரபிரதேச தேர்தல் களத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Adhiti Singh ,Uttar Pradesh ,Lucknow ,Bajaka ,Congress party ,
× RELATED கை, கால்களை கட்டிப்போட்டு கணவருக்கு...