×

மாணவர் சேர்க்கை பேரணி

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 27: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் மாணவர் தீவிர சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி, வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் வேலுச்சாமி, ஆசிரியர்கள், ஊர் பெரியோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அரசு பள்ளி நமது பள்ளி, நமது பள்ளி நமது பெருமை, மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து படிப்பதால் கிடைக்க கூடிய நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய பேரணி இறுதியாக பள்ளியில் வந்தடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post மாணவர் சேர்க்கை பேரணி appeared first on Dinakaran.

Tags : Student Admission Rally ,R.S. ,Mangalam ,Anandur Panchayat Union Primary School ,R.S. Mangalam ,District Education Officer ,Thenmozhi ,Veluchamy ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா