- வேதாரண்யம் சர்வ கட்டளை
- மசூதி
- இப்தார்
- தென்னரசு
- ஜனாதிபதி
- வேதாரண்யம் வர்த்தக சங்கம்
- தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்...
வேதாரண்யம், மார்ச் 27: வேதாரண்யம் சர்வ கட்டளை பள்ளிவாசல் வளாகத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளிவாசலில் பத்தாவது ஆண்டாக நடைபெறும் இப்தார் விருந்துக்கு, வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, தலைமை வகித்தார். தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத் தலைவர் ஷாபி, முன்னாள் தலைவர் எம்.ஜெபருலாகான், நவாஸ்தீன், தோப்புத் துறை தலைமை இமாம் சாகுல் ஹமீது, முகமது யாக்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தகர் சங்கத் மாவட்டத் தலைவர் வேதநாயகம் செயலாளர் சுபஹானி, பொருளாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன், வழக்கறிஞர் அன்பரசு, தோப்பு துறை நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புயல் குமார், உள்ளிட்ட ஏராளமான இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
The post வேதாரண்யத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.
