×

ஆன்லைன் சூதாட்டங்களை ஒன்றிய அரசு எப்போது முழுமையாகத் தடை செய்யும்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

புதுடெல்லி: தமிழ்நாடு மாநில அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்துள்ள நிலையில், ஒன்றிய பாஜ அரசு எப்போது ஆன்லைன் சூதாட்டங்களை நாடு முழுவதிலுமாக தடை செய்யும் என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார்.
மக்களவையில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
* ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் ஒன்றிய அமைச்சர் தார்மீகப் பொறுப்பிலிருந்து பின்வாங்குகிறாரா?
* தமிழ்நாடு மாநில அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனைத்து ஆன்லைன் சூதாட்டத் தளங்களையும் தடை செய்ய எவ்வளவு காலம் வேண்டும்?
* ஆன்லைன் சூதாட்டத் தளங்களை தடை செய்வதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. இதுதான் உங்கள் அறமா? எனக் கேள்வி எழுப்பினார்.

The post ஆன்லைன் சூதாட்டங்களை ஒன்றிய அரசு எப்போது முழுமையாகத் தடை செய்யும்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Dayanidhi Maran ,Lok ,Sabha ,New Delhi ,Tamil Nadu state government ,Lok Sabha ,Union BJP government ,Central Chennai Parliament… ,Dinakaran ,
× RELATED சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி...