×

கருப்பு நிறம் என்பதால் பலரால் அவமானப்படுத்தப்பட்டேன்: கேரள அரசு தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் வேதனை

திருவனந்தபுரம்: கேரள அரசு தலைமைச் செயலாளராக இருப்பவர் சாரதா முரளீதரன். இவருக்கு முன் இவரது கணவர் டாக்டர் வேணு தான் கேரள அரசின் தலைமைச் செயலாளராக இருந்தார். டாக்டர் வேணு ஓய்வு பெற்ற பின்னர் மனைவி சாரதா முரளீதரன் தலைமைச் செயலாளர் ஆனார். கேரளாவில் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து தலைமைச் செயலாளர் ஆனது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். விரைவில் ஓய்வு பெற உள்ள சாரதா முரளீதரன் முகநூலில் தன்னுடைய கருப்பு நிறத்தால் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்கள் குறித்து வேதனையுடன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு: என்னுடைய கருப்பு நிறத்தால் சிறு வயது முதலே நான் அவமானப்பட்டு வருகிறேன். எனக்கு 4 வயது இருக்கும்போது அம்மாவிடம் நான் கூறியது இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது. என்னை வயிற்றுக்குள் திரும்ப வைத்து கருப்பு நிறத்திற்குப் பதிலாக வெள்ளை நிறத்துடன் மீண்டும் என்னை பிறக்க வைக்க முடியுமா என்று நான் என்னுடைய அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு சிறு வயது முதலே நான் என்னுடைய நிறத்தால் அவமானப்பட்டுள்ளேன். சமீபத்தில் கூட என்னைப் சந்திக்க வந்த ஒருவர் என் நிறத்தை வைத்து என்னை வேதனைப்படுத்தினார்.

கருப்பை பார்க்கும் போது சிலருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று எனக்கு புரியவில்லை. இதனால் எனக்கும் கருப்பு நிறத்தின் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கியது. ஆனால் என்னுடைய பிள்ளைகள்தான் அந்த வெறுப்பை மாற்றினர். அவர்கள் தான் கருப்பு மீது எனக்கு ஒரு பற்றை ஏற்படுத்தினர். இப்போது அந்த நிறத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. இவ்வாறு அவர் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே தன்னுடைய குறிப்பை முகநூலில் இருந்து சாரதா முரளீதரன் நீக்கிவிட்டார். பலரும் வற்புறுத்தியதை தொடர்ந்து சாரதா முரளீதரன் அவற்றை மீண்டும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

The post கருப்பு நிறம் என்பதால் பலரால் அவமானப்படுத்தப்பட்டேன்: கேரள அரசு தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Secretary ,Saratha Muralitharan ,Thiruvananthapuram ,Chief Secretary of ,Kerala Government ,Dr. ,Venu ,Chief Secretary… ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்