×

தோட்டவாரம் பகுதியில் படிப்பகம் திறப்பு விழா

குலசேகரம், மார்ச் 27: தோட்டவாரம் பகுதியில் படிப்பகம் திறப்பு விழா நடந்தது. ஆற்றூர், தோட்டவாரம் பகுதியில் சிக்மா விளையாட்டு மற்றும் கலைமன்றம் சார்பில் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மன்ற தலைவர் திபோர்சியஸ் தலைமை வகித்தார். செயலாளர் எட்பின் அருள் வரவேற்று பேசினார். ராஜேஷ், பால் ஸ்டிபன்சன், ராபர்ட் புரூஸ், ஜியோலின், சனவ் ரோஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முரளி, காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ் படிப்பகத்தை திறந்து வைத்து பேசினார். நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

The post தோட்டவாரம் பகுதியில் படிப்பகம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Thottavaram ,Kulasekaram ,Sigma Sports and Arts Council ,Attur ,Diborsius ,Edpin Arul… ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்