×

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கருப்பசாமி பாண்டியன் மறைவு குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

கருப்பசாமி பாண்டியன் 1977-இல் ஆலங்குளம், 1980-இல் பாளையங்கோட்டை, 2006-இல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.

நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார் .

The post முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Karupasami Pandian ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA MLA ,Former ,Mr. ,Karupasamy Pantheon ,Karupasamy ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...