×

கஞ்சா கடத்திய இருவருக்கு 3 ஆண்டு சிறை

 

மதுரை, மார்ச் 26: தேனி மாவட்டம், கண்டமனூர் விலக்கு பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக கண்டமனூர் விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் கடந்த 2021ம் ஆண்டு அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தபோது அவ்வழியே வந்த ஆண்டிபட்டியை சேர்ந்த முருகன் மனைவி காந்திமதி(41), கோகுல்நாத் (25) ஆகிய இருவரையும் மடக்கி சோதனை செய்ததில் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.விஜயபாண்டியன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், கஞ்சா கடத்தியது உறுதியானதால் காந்திமதி, கோகுல் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

The post கஞ்சா கடத்திய இருவருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kandamanoor Exclusion Police ,Kandamanoor Exclusion ,Theni district ,Andipatti ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி