×

மின் ஊழியர்கள் போராட்டம்

 

மதுரை, மார்ச் 26: மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்யக் கோரி தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்த போராட்டத்தில், ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், மின்சார வாரியத்தில் உள்ள காலிபணியிடங்களை உடனே நிரப்ப கோரியும், மின்வாரியத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். மண்டல செயலாளர் உமாநாத் நன்றியுரை கூறினார்.

The post மின் ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,dharna ,Electricity Board ,Chief Engineer's ,Madurai Race Course Road ,State Vice President… ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...