×

காலாவதி உரம் விற்றால் லைசென்ஸ் ரத்து வேளாண் துறை எச்சரிக்கை

 

பழநி, மார்ச் 26: காலாவதி உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படுமென உரக்கடைகளுக்கு வேளாண் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை மையங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் செயல்பட வேண்டிய விதங்கள் குறித்து வேளாண் துறையினர் கூறியதாவது: தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை மையங்களில் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்ய கூடாது. விவசாயிகளுக்கு உரிய முறையில் பட்டியலிடப்பட்டு ரசீது வழங்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட அல்லது காலவதியான பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்ய கூடாது. விற்பனை உரிமங்கள் விவசாயிகள் பார்வையில் தெரியுமாறு கடையில் வைக்க வேண்டும்.

விலை பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அனுமதி இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்ய கூடாது.  இவ்விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் மீது உரக்கட்டுப்பாட ஆணை 1985 மற்றும் பூச்சிக்கொல்லி சட்டம் 1968ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

The post காலாவதி உரம் விற்றால் லைசென்ஸ் ரத்து வேளாண் துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Agriculture Department ,Palani ,Dindigul district ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி