×

கள்ளக்காதல் தகராறில் காவலர் மண்டை உடைப்பு தலைமை செயலக பெண் ஊழியர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி ராமலிங்கபுரம் சாமி பக்தன் தெருவை சேர்ந்த உமா மகேஸ்வரி (35), தலைமை செயலகத்தில் ஆவணங்கள் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது முதல் கணவரை பிரிந்து, அண்ணாசாலையில் உள்ள தனியார் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வரும் லோகநாதன் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். உமா மகேஸ்வரி ஒரு வழக்கு சம்பந்தமாக தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்திற்கு சென்று வந்துபோது, அங்கு டிரைவராக பணிபுரியும் லட்சுமிபதி (30) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.லோகநாதன் வீட்டில் இல்லாதபோது, லட்சுமிபதி உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றி அறிந்த லோகநாதன் உமா மகேஸ்வரியிடம் தகராறு செய்ததுடன், தலைமை செயலக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், லட்சுமிபதி மற்றும் உமா மகேஸ்வரியை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, உமாமகேஸ்வரி லட்சுமிபதியை வீட்டிற்கு அழைக்காமல், வெளியே அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதுவும் லோகநாதனுக்கு தெரியவர, உமா மகேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, ‘‘நான் லட்சுமிபதியிடம் பேசுவது இல்லை. வேண்டுமென்றால், அவரை வீட்டிற்கு அழைக்கிறேன். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்,’’ எனக்கூறி, லட்சுமிபதியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி, லட்சுமிபதி அங்கு சென்றபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, உமா மகேஸ்வரி தனது கணவர் லோகநாதனுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் காவலர் லட்சுமிபதியை பலமாக அடித்து உள்ளார். இதில் அவரது மண்டை உடைந்தது. இதுகுறித்து தலைமை செயலக காவலர் குடியிருப்பு போலீசில் லட்சுமிபதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், உமாமகேஸ்வரி காவலர் லட்சுமிபதியிடமிருந்து ரூ.4 லட்சம் வரை வாங்கியதும், அவர் பணிபுரியும் தலைமை செயலகத்தில் மேலும் பலரிடம் நெருங்கி பழகி, பணம் வாங்கியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவர் லோகநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்….

The post கள்ளக்காதல் தகராறில் காவலர் மண்டை உடைப்பு தலைமை செயலக பெண் ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Chief Secretariat ,Perambur ,Uma Maheshwari ,Otteri Ramalingapuram Sami Bhaktan Street ,
× RELATED எதிர்க்கட்சிகளுக்கு பேச...