×

ஆதிதிராவிடர் நலத்துறையில் 21 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியின்போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகள் 21 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். அரசுப் பணியில் இருக்கும்போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசால்,  தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருப்போர் பட்டியலிலிருந்து முதுநிலை மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் 2019-20 மற்றும்   2020-21ம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின்படி 14 இளநிலை உதவியாளர் மற்றும் 7 தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்களுக்கு நேற்று  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சோ.மதுமதி, பழங்குடியினர் நல இயக்குநர் வி.சி.ராகுல் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்….

The post ஆதிதிராவிடர் நலத்துறையில் 21 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar Welfare Department ,Chennai ,Adi Dravidar ,Tribal Welfare Department ,
× RELATED தையூர், இரும்பேடு அரசு பள்ளிகள் சென்டம்