×

பூக்குழி திருவிழாவின் 7ம் நாளான இன்று; ஆண்டாள் கிளியுடன் பெரிய மாரியம்மன் வீதியுலா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில், பூக்குழி திருவிழாவின் 7ம் நாளான இன்று காலை ஆண்டாள் கிளியுடன், அம்மன் பூப்பல்லக்கில் வீதியுலா வந்தார். நகர் முழுவதும் அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீபெரியமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் 7ம் நாளான இன்று காலை பெரிய மாரியம்மன் சர்வ அலங்காரத்தில், ஆண்டாள் கிளியுடன் பூப்பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் சர்க்கரை அம்மாள், நிர்வாக அதிகாரி ஜோதிலட்சுமி ஆகியோரும், கோயில் பூஜைக்கான ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் சுந்தர் ஜி தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

The post பூக்குழி திருவிழாவின் 7ம் நாளான இன்று; ஆண்டாள் கிளியுடன் பெரிய மாரியம்மன் வீதியுலா: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Pookkuzhi festival ,Periya Mariamman ,Andal Kili ,Srivilliputhur ,Srivilliputhur Periya Mariamman Temple ,Amman ,Poopallak ,Sri ,Srivilliputhur, Virudhunagar district… ,Periya ,Mariamman ,
× RELATED திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி,...