×

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

2 கப்துருவிய தேங்காய்
1 கப்வெண் புழுங்கலரி
15முந்திரி
1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
4ப.மிளகாய்
2சி.மிளகாய்
1 டீ ஸ்பூன்கடுகு
1 ஸ்பூன்க.பருப்பு
1 ஸ்பூன்உ.பருப்பு
ருசிக்குஉப்பு
1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
1 டீ ஸ்பூன்சர்க்கரை
1 ஆர்க்குகருவேப்பிலை
1டீ ஸ்பூன்ந.எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
1 ஸ்பூன்நெய்
1 3/4 கப்தண்ணீர்

அலங்கரிக்க:-

வறுத்த முந்திரி 10

செய்முறை:

தேங்காயை வெள்ளையாக துருவிக் கொள்ளவும்.ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.பௌலில் அரிசியை சுத்தம் செய்து 1 3/4 தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு போடவும்.கடுகு பொரிந்ததும், க.பருப்பு, உ.பருப்பு போடவும்.அடுத்து, ப.மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.அடுத்து துருவின தேங்காய், சர்க்கரை போட்டு சிவக்க வதக்கவும்.வடித்த சாதம் ஆறினதும், அதனுடன் பெருங்காயத் தூள், ந.எண்ணெய், உப்பு போடவும்.பின் நன்கு ஒன்று சேர கலந்து, அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும்.அடுப்பை சிம்மில் வைத்து, நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும்,முந்திரியை போடவும்.முந்திரி வறுபட்டதும், சி.மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.தாளித்ததை சாதத்தில் கொட்டவும்.மேலே வறுத்த முந்திரியை வைத்து அலங்கரிக்கவும்.இப்போது, சுவையான, சுலபமான, என் அப்பாவிற்கு பிடித்த, தேங்காய் சாதம் தயார். வெண் புழுங்கலரிசி, சேர்ப்பதால் கூடுதல் சுவையை கொடுக்கும்.

The post தேங்காய் சாதம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வத்தல் குழம்பு