×

கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மார்ச் 25: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட ஊழியர்கள் சங்கம் (எஸ்ஆர்இஎஸ்) சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்படி ரயில்வே மேற்கு நுழைவாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார். கோட்ட தலைவர் சென்ன கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தடைகளை நீக்கி தேவைக்கேற்ப காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.

ரயில்வே போர்டு விதிமுறைகள் மற்றும் அளவுகோலை பின்பற்றி அனைத்து தகுதி நிலைகளிலும் கூடுதல் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் நிலுவையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவேண்டும். ரயில்வே வேலைகளை கான்டிராக்ட் மற்றும் அவுட்சோர்ஸிங் முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். 12 மணி நேர பணி நேரத்தை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் கோட்ட பொருளாளர் பிரபு, நாராயணபிரசாத், எட்வின்பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

 

The post கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Railway ,Madurai ,Southern Railway ,Madurai Divisional Employees' Union ,SRES ,Union Government ,Divisional Secretary ,Nagendran ,Railway West Entrance… ,Dinakaran ,
× RELATED லோகோ பைலட்டுகளுக்காக ரயில்...