- தண்ணீர் தேவை
- உலக நீர் தினம்
- கும்பகோணம்
- வேளாண் கல்லூரி
- பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி…
- தின மலர்
கும்பகோணம், மார்ச்25: உலக நீர் தினத்தை முன்னிட்டு நீரின் அவசியத்தை வலியுறுத்தி வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக நீர் தினத்தை முன்னிட்டு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன்ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகளான தீபிகா, தனுஸ்ரீ, திவ்யா, தாரிணி, கோபிகா, ஹரிணி, ஹரியதர்ஷினி, ஹேமஜீவிதா, ஹரிணி, ஐஸ்வர்யலெட்சுமி ஆகியோர் தங்களது கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் நீரின் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பு மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது நீர் சரிவர பயன்படுத்துதல் மற்றும் நீரின் முக்கியத்துவம் பற்றிய தெளிவான உணர்வுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த பேரணியில் பள்ளி தலைமையாசிரியர் பிராபகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post உலக நீர் தினத்தை முன்னிட்டு நீரின் அவசியத்தை உணர்த்தும் பேரணி appeared first on Dinakaran.
