- உலக நீர் தினம்
- பொன்னமாவதி
- புதுக்கோட்டை நேரு இளைஞர் மையம்
- பொன்னமாவடி பிரபாசம் இளைஞர் நற்பணி மன்றம்
- உலக தண்ணீர் தினம்…
- தின மலர்
பொன்னமாவதி, மார்ச் 25: பொன்னமராவதியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் மறறும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை நேரு இளையோர் மையம் மற்றும் பொன்னமராவதி பிரபஞ்சம் இளையோர் நற்பணி மன்றம் ஆகிவை இணைந்து உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. வட்டாட்சியர் சாந்தா தலைமைவகித்தார்.
அரசுபள்ளி மாணவர்களுக்கு தண்ணீரின் இன்றியமையாமை மற்றும் சிக்கனம் குறித்த பேச்சு மற்றும் ஒவியப்போட்டிகள் நடததப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. இதில் பொன்னமராவதி வனச்சரகர் ராமநாதன், தமிழ்ச்செம்மல் ராமச்சந்திரன், சேதுபதி, கிராம நிர்வாக அலுவலர; பாண்டியன், பாஸ்கர், தியாகராஜன், குமரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வினை பிரபஞ்சம் வளர்ச்சி அறக்கட்டளை இயக்குனர் நாராயணசாமி ராஜூ ஒருங்கிணைத்தார்.
The post உலக தண்ணீர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் appeared first on Dinakaran.