×

கல்லூரி பட்டமளிப்பு விழா

தேவகோட்டை, மார்ச் 25: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் சேவுகன் தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் செந்தில்ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் 369 பேருக்கு பட்டம் வழங்கினார். விழாவில், முதுகலை வணிகவியல் துறை மாணவி ஐஸ்வர்யா பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கமும், பொருளியல் துறை மாணவி மாதரசி பல்கலை. 10வது இடமும், இதேபோல இயற்பியல் துறை மாணவி ஹேமப்பிரியா 4ம் இடமும், வணிக மேலாண்மைத் துறை மாணவி பர்கானா பர்வீன் 9ம் இடமும் பெற்றனர். முன்னதாக, கல்லூரி முதல்வர் நாவுக்கரசு வரவேற்று பேசினார்.

The post கல்லூரி பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : College Graduation Ceremony ,Devakottai ,19th Graduation Ceremony ,Devakottai Sevugan Annamalai College ,College Board ,Treasurer ,Sevugan ,Karaikudi ,Aghappa University ,Registrar ,Sentilrajan ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் அருகே அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா: 232 மாணவ மாணவியர் பெற்றனர்