×

காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் தமிழ் துறை கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி, காஞ்சி  கிருஷ்ணா கலை கல்லூரி தமிழ்த்துறை சார்பில் “திருக்குறளும் வாழ்வியலும்” கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமையேற்றார். கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் டாக்டர் அ.அரங்கநாதன், தலைவர் கே.வீரராகவன், செயலாளர் வி.மோகனரங்கம், பொருளாளர் எம்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமிழ்த்துறைத் தலைவர் வ.வீரராகவன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திருக்குறள் சி.வெற்றிவேல்  “திருக்குறளும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.மேலும் திருக்குறளில் ஆரம்ப வார்த்தை, முடிவுச்சொல் எந்த அதிகாரத்தில் இருந்து குறட்பாவை கேட்பினும் சரியான குறட்பாக்களை கூறி மாணவ, மாணவிகளை வியப்பில் ஆழ்த்தினார். துணை முதல்வர் பிரகாஷ், துறைப் பேராசிரியர்கள் சரளா, பாபுகாந்தி, தியாகு, பாரதிதாசன், பப்பிதா, ஆறுமுகம், சுஜி, உதவி பேராசிரியர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி போராசிரியர் கார்த்திகா நன்றி கூறினார்….

The post காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் தமிழ் துறை கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Department Seminar ,Kanchi Krishna College ,Kanchipuram ,Keezhampi ,Kanchi ,Krishna Arts College Tamil Department ,Trukkural and ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...