×

சர்ச்சை பேச்சு: அண்ணாமலை மீது சேலம் போலீஸ் வழக்குப்பதிவு

சேலம்: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அண்ணாமலை மற்றும் எச்.ராஜா மீது சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை விவகாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பியூஷ் மானுஷ் கொடுத்த புகாரின்பேரில் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

The post சர்ச்சை பேச்சு: அண்ணாமலை மீது சேலம் போலீஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Salem police ,Annamalai ,Salem ,BJP ,H. Raja ,Piyush Manush ,Thiruparankundram Murugan Temple… ,
× RELATED தமிழக பாஜ தலைவர் பதவி பறிப்பு எதிரொலி நிம்மதி தேடி அண்ணாமலை இமயமலை பயணம்?