×

கூடங்குளம் அருகே மண் கடத்திய 2 பேர் கைது

 

நெல்லை, மார்ச் 24: கூடங்குளம் அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 யூனிட் குளத்து மண், ஒரு டாரஸ் லாரி, ஜேசிபி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்ட ராதாபுரம் மண்டல துணை தாசில்தார் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது களக்காடு, பாலமார்த்தாண்டபுரம், வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த கருத்தபாண்டி (43), மற்றும் கூடங்குளம், இந்திரா நகரை சேர்ந்த கண்ணன் (31) ஆகியோர் சேர்ந்து கூடங்குளம் அருகேயுள்ள சடையனேரி குளத்தின் அருகே ஜேசிபி மூலம் டாரஸ் லாரியில் குளத்து மண்ணை எந்த ஒரு அனுமதியும் இன்றி அள்ளிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து ராதாபுரம் மண்டல துணை தாசில்தார் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

The post கூடங்குளம் அருகே மண் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Nellai ,Taurus ,JCB ,Nellai district ,Radhapuram… ,Dinakaran ,
× RELATED பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில்...