×

திருவாரூரில் பகத்சிங் நினைவு தின ரத்ததான முகாம்

 

திருவாரூர், மார்ச் 24: சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் நினைவு நாளையொட்டி திருவாரூரில் நடைபெற்ற ரத்ததான முகாமை எம்பி செல்வராஜ் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தனர்.சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் மார்ச் 23ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இதனையொட்டி அனைத்திந்திய அனைந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட திமுக செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ, நாகை எம்.பி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் தினேஷ், மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர்.

The post திருவாரூரில் பகத்சிங் நினைவு தின ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Bhagat Singh ,Memorial Day Blood Donation Camp ,Tiruvarur ,Selvaraj ,MLA ,Bundi Kalaivanan ,Rajguru ,Sukhdev ,Sukhdev… ,Bhagat ,Singh Memorial Day ,Blood ,Donation Camp ,
× RELATED ஆறுமுகநேரி சிவன் கோவிலில் ஆனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றம்