×

காவலர் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

 

நாமக்கல், மார்ச் 24: நாமக்கல் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில், பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாமக்கல் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில், மூன்றில் ஒருவர் என்ற விகிதத்தில் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் குடும்பத்தில் வேலையில் இல்லாத மனைவி, குடும்ப உறுப்பினர்களை ₹15,000 மாத ஊதியத்தில் பணியமர்த்தும் பொருட்டு தகுதி வாய்ந்தோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப்பின்னணியோ, எந்த அமைப்பிலோ, அரசியல்கட்சி சார்ந்தவராகவோ இருக்கக் கூடாது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இன்று (24ம் தேதி) முதல் 28ம் தேதி வரை இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஆயுதப்படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்பவேண்டும். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.

The post காவலர் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District Guard Supermarket ,District ,SP ,Rajeskannan ,post Guard ,Dinakaran ,
× RELATED தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும்