- ஜாக்டோ ஜியோ
- விருதுநகர்
- JACTO
- ஜியோ
- விருதுநகர் கலெக்டர்
- மாவட்டம்
- குணசேகரன்
- கருப்பையா
- செல்வாகனேசன்
- முத்தையா
- பிச்சை
- தின மலர்
விருதுநகர், மார்ச் 24: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், கருப்பையா, செல்வகணேசன், முத்தையா, பிச்சை தலைமையில் நடைபெற்றது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள 30 சத காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
The post 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் appeared first on Dinakaran.