×

காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

 

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 24: ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில், எஸ்பி சந்தீஷ் திடீர் ஆய்வு செய்தார். சுய மருத்துவ பரிசோதனை கருவிகளை வழங்கினார். ஆய்வின்போது காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுத வைப்பறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் பணியின் போது காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு காவலர்கள் சுயமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் விதமாக ஏஎஸ்பி தனுஷ் குமார் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

அந்த பரிசோதனை கருவியை கொண்டு ஸ்டேஷனிற்கு ஆய்வுக்கு வருகை புரிந்த எஸ்.பி சந்தீஷ் மருத்துவ சுயபரிசோதனை செய்து கொண்டார். இந்நிகழ்வில் பயிற்சி ஏஎஸ்பி தனுஷ் குமார் மற்றும் திருவாடானை காவல் உட்கோட்ட டிஎஸ்பி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : SP ,R.S.Mangalam ,Sandesh ,R.S.Mangalam police station ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா