×

பனைக்குளத்தில் திருக்குர்ஆன் ஓதும் போட்டி

மண்டபம், மார்ச் 24: ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் நடத்திய மாணவ, மாணவிகான 31ம் ஆண்டு குர்ஆன் ஓதும் போட்டியின் பரிசளிப்பு விழா நத்தர் வலியுல்லாஹ் தர்ஹா வளாக மைதானத்தில் நடந்தது. முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வகாப் தலைமையில் முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி முன்னிலை வகித்தார். ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் சாகுல் ஹமீது வரவேற்றார்.

செய்யது முஹம்மது ஆலீம், தலைமை பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் ஆலீம் அஸ்மாபாக், அன்வர் தீன் அப்துல் ஜப்பார் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இந்த போட்டியில் 361 பேர் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூ15ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் அப்துல் வகாப், செயலாளர் சிராஜ் தீன், பொருளாளர் பலீல் அகமது மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர். சிறப்பு அமைப்பாளராக முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, நூரூல்மன்னான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக திருக்குர்ஆன் ஓதும் போட்டி செயலாளர் சிராஜ் தீன் நன்றி கூறினார்.

The post பனைக்குளத்தில் திருக்குர்ஆன் ஓதும் போட்டி appeared first on Dinakaran.

Tags : Holy Quran ,Panaikulam ,31st annual Quran recitation competition ,Ramanathapuram ,Panaikulam United Muslim Association ,Nathar Waliullah Dargah ,Muslim Administrative Council ,President ,Abdul… ,
× RELATED மீண்டும் பேருந்து இயக்க கோரிக்கை