- உலக நீர் தினம்
- ரெடியார்சத்திரம் தோப்புப்பட்டி
- ரெட்டியார்சத்திரம்
- எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- அம்ரிதா
- அருணா
- அஸ்மின்சோபியா
- டி. புவனேஸ்வரி
- அஸ்வதி பிரியா
- பாரதிப்ரியா
- எஸ்.புவனேஸ்வரி
- தான்யா
- அஸ்வினி
- தோப்புப்பட்டி
ரெட்டியார்சத்திரம், மார்ச் 24: ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் எஸ்ஆர்எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் அமிர்தா, அருணா, ஆஸ்மின்சோபியா, டி.புவனேஸ்வரி, அஸ்வதி பிரியா, பாரதிபிரியா, எஸ்.புவனேஸ்வரி, டான்யா, அஸ்வினி ஆகியோர் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி களப்பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உலக தண்ணீர் தினத்தையொட்டி அரசு நிதியுதவி பெறும் தோப்புப்பட்டி ஸ்ரீ முருகன் நிதி தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் நீரின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி, ஆசிரியர் ஜெகநாதன் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.
