×

தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்: நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்பி பதிலடி

சென்னை: தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “தமிழகத்தில் இருந்து வரிப்பணம் அதிகம் தருகிறோம்.1 ரூபாய் தந்தால், 7 பைசா தான் திரும்புகிறது என்கின்றனர். மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது.

அனைத்துக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறோம். ஜனரஞ்சகமாக இவர்கள் விவாதிப்பதே தப்பு என்று” கூறியிருந்தார். இதற்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ்மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்

The post தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்: நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்பி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kanimozhi MP ,Nirmala Sitharaman ,Chennai ,Kanimozhi ,Union Finance Minister ,Tamil Nadu… ,
× RELATED உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு...