×

முகமது யூனுஸ்- பிரதமர் மோடி சந்திப்புக்கான வங்கதேச கோரிக்கை பரிசீலனையில் உள்ளது: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்தில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அதற்கு இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,‘‘வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசியல் ரீதியானது. அதில் சிறுபான்மையினரை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. அடுத்த மாதம் 2ம் தேதி தாய்லாந்து நாட்டில் பிம்ஸ்டெக்கின் மாநாடு நடக்கிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடும்’’ என்றார்.பிம்ஸ்டெக் மாநாட்டின் பின்னணியில் வங்கதேச இடைக்கால தலைவருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவாரா என்று கேட்டதற்கு, இது குறித்த வங்கதேச அரசின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது’’ என்றார்.

The post முகமது யூனுஸ்- பிரதமர் மோடி சந்திப்புக்கான வங்கதேச கோரிக்கை பரிசீலனையில் உள்ளது: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Mohammad Yunus ,PM Modi ,Union Minister ,Jaishankar ,New Delhi ,Parliamentary Consultative Committee on External Affairs ,India ,Foreign Minister ,Bangladesh… ,Mohammad Yunus-PM Modi ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத நில அபகரிப்பு புகார் ஷேக்...