×

இடுக்கி மலைக்கிராமங்களில் பூத்துக் குலுங்கும் காபி செடிகள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

மூணாறு: இடுக்கி மலைக்கிராமங்களில் காபி செடிகளில் அதிகளவில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நறுமணப் பயிர்களின் உறைவிடமாக கருதப்படும் இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் ஏலம், குறுமிளகு, காபி, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்த நிலையில் தற்போது காபி செடிகளில் அதிகளவில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

வெண்மை நிறத்தில் பூத்துள்ள காபி பூக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. மேலும் கோடை மழையின் மண் வாசனையோடு சேர்ந்துள்ள காபி பூக்களின் மனம் காப்பி தோட்டத்தைக் கடந்து செல்பவர்களின் மனதை கொள்ளை கொள்கிறது. தற்போது பூக்கள் அதிகளவில் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு காபி செடி குறைந்தது 40 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழக் கூடியது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காபி அறுவடை செய்யப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரி வரை நடைபெறும்.

The post இடுக்கி மலைக்கிராமங்களில் பூத்துக் குலுங்கும் காபி செடிகள்: மகிழ்ச்சியில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Pikchi ,Melanaru ,Pikhi ,Pikhi district ,Pikki Hills ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு