×

தாண்டன்குளம் அரசு பள்ளி மாணவர்கள் சிட்டுகுருவி வடிவில் நின்று அசத்தல்

 

கொள்ளிடம், மார்ச் 23: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிட்டுக்குருவி தின விழா கொண்டாடப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற இந்த சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் சிட்டுக்குருவி வடிவம் போன்று நின்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விவசாய ஆலோசகர் எபினேசர் கலந்துகொண்டு குறைந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தாண்டன்குளம் அரசு பள்ளி மாணவர்கள் சிட்டுகுருவி வடிவில் நின்று அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Thandankulam Government School ,Kollidam ,Sparrow Day ,Thandankulam Government High School ,Mayiladuthurai district ,TVS Srinivasan Services Trust ,
× RELATED சிதம்பரத்தில் முதலை பண்ணை அமைக்க வாய்ப்பில்லை: அமைச்சர் பொன்முடி பதில்