×

சீர்காழியில் தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு: தேங்கி கிடக்கும் குப்பைகள்

 

சீர்காழி, மார்ச் 23: சீர்காழி நகராட்சி தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்காததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் சாலையிலேயே கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் சாலைகளில் கொட்டப்பட்ட குப்பைகளில் ஆடு, மாடுகள், பன்றிகள் உணவு கழிவுகளை தின்று குப்பைகளை சிதறடித்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. எனவே அரசு உடனடியாக சீர்காழி நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள்கோரிக்கை விடுத்து வருகின்றன.

The post சீர்காழியில் தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு: தேங்கி கிடக்கும் குப்பைகள் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Sirkazhi Municipality ,Dinakaran ,
× RELATED வைத்தீஸ்வரன்கோவிலில் தாழ்வாக...