×

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, மார்ச் 23: கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை அருகில் இந்தியா கூட்டணி சார்பில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மேற்கு நகர திமுக பொறுப்பாளர் அஸ்லம் தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட தலைவர் நூர்முகமத் வரவேற்று பேசினார். இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியை கோபிநாத் எம்பி., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., ஆகியோர் இணைந்து துவங்கி வைத்தனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி தலைமை மாவட்ட அரசு காஜி கலீல் அகமத் துவா ஓதினார். தொடர்ந்து அனைவரும் நோன்பு திறந்தனர். இதில், இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முகமது உமர் நன்றி கூறினார்.

The post இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Iftar ,India Alliance ,Old Pettai Fort ,Krishnagiri West City DMK ,Aslam ,DMK District ,President ,Nurmuhammad ,Dinakaran ,
× RELATED 83 ஆண்டு கால கோரிக்கை கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டம் நிறைவேறுவது எப்போது?