- குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
- பாப்பிரெடிபட்டி
- பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம்
- பி.துரிஞ்சிபதி.
- மாவட்ட மருத்துவ அலுவலர்
- டாக்டர்
- கௌரிசங்கர்
- மருத்துவ அதிகாரி
- சுதா
- மாவட்ட சுகாதார மேற்ப
- சாதிக் பாஷா...
- பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
- தின மலர்
பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 23: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.துறிஞ்சிப்பட்டியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கு கற்பித்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் சுதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாதிக் பாஷா முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.
இந்த முகாமில், வளரிளம் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் இளம் வயது திருமணம் தடுத்தல், பாலின விகிதாச்சாரம் மேம்படுத்துதல் குறித்து நலக்கல்வி வழங்கப்பட்டது. பெண் கல்வி ஊக்குவித்தல் தொடர்பாக அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் யாரப் பாஷா, சமுதாய சுகாதார செவிலியர் நாகேஸ்வரி, சிங்காரம், செல்வி, ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் கார்ல் மார்க்ஸ் நன்றி கூறினார்.
The post பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.
