×

தெலங்கானாவில் பறவை காய்ச்சல்: 2 லட்சம் கோழிகள் அழிப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், பண்ணையில் 2 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா மண்டலம், குந்த்ரப்பள்ளி கிராமத்தில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பதாக தகவல் பரவியது. மேலும் ஒரு கோழிப் பண்ணையில் பிராய்லர் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து நேற்று அங்கு வந்துள்ள கால்நடை மருத்துவர்கள் கோழிகளை பரிசோதனை செய்தனர். அதில் சுமார் 2 லட்சம் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை கொல்ல முடிவு செய்தனர். அதன்படி 2 லட்சம் கோழிகளை பாதுகாப்பாக அழித்தனர். மேலும் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா மண்டலம், குந்த்ரப்பள்ளி கிராமத்தில் அதிகாரிகள் சுற்றியுள்ள பகுதியை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு சிறப்பு முகாம்கள் அமைத்து யாருக்காவது தொடர் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளதா என பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

The post தெலங்கானாவில் பறவை காய்ச்சல்: 2 லட்சம் கோழிகள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Nalgonda district of ,Kuntrapalli village ,Sidhyala mandal, ,Nalgonda district, Telangana ,
× RELATED ஓடிக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் இருந்து கழன்ற பெட்டிகள்