×

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டாசில் அடைப்பு

நாமக்கல், மார்ச் 22: குமாரபாளையத்தில், ரேஷன் அரிசி கடத்தலில் கைதான 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.நாமக்கல் மாவட்டத்தில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் வாகனத்தில் 3100 கிலோ ரேசன் அரிசி கடத்திய வழக்கில், சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த சவெங்கடேஷ், மற்றும் சேலம் நெத்திமேட்டை சேர்ந்த ராஜா ஆகிய இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து கோவை மண்டல எஸ்பி பாலாஜி சரவணன், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், இருவரையும் ஒரு ஆண்டு சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

The post ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டாசில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kundas ,Namakkal ,Kumarapalayam ,Namakkal district ,Namakkal Civil Supplies Crime Investigation Department police ,Dinakaran ,
× RELATED ஜாமீனில் வந்து தலைமறைவான கொலை குற்றவாளிகள் 2 பேருக்கு பிடிவாரண்ட்