×

அரசு கல்லூரியில் கருத்தரங்கம்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 22: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகவியல் துறையின் ஸ்ரீநிவாஸ் மன்றத்தின் சார்பில் தமிழ் கலாச்சாரத்தில் சமூகவியல் கூறுகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ரவி தலைமை வகித்து பேசினார். சமூகவியல் துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழர் மரபு, பண்டைய கல்வெட்டுகள் மற்றும் கலாச்சாரத்தில் சமூகவியல் கூறுகள் குறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி இணை பேராசிரியர் சந்திரசேகர் விளக்கி பேசினார். சமூகவியல் துறை விரிவுரையாளர் புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார். மூன்றாமாண்டு ஆண்டு சமூகவியல் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

The post அரசு கல்லூரியில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Government College ,Pappireddipatti ,Pappireddipatti Government Arts and Science College ,Srinivas Mandram ,Department of Sociology ,Ravi.… ,College ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி