×

நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ராசிபுரம், மார்ச் 22: ாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள், மற்றும் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதன்படி நேற்று பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பால், தயிர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பின்னர் வெள்ளி காப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

The post நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Nithya Sumangali Mariamman Temple ,Rasipuram ,Rasipuram, Makkal district ,Mariamman ,Amavasya ,Pournami ,
× RELATED அம்மன் கோயில் தேரோட்ட விழா