×

நெல்லை சரக போலீசாருக்கு சாலை பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

நெல்லை, மார்ச் 22: நெல்லை சரக போலீசாருக்கான சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த பயிற்சி வகுப்பில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை 75 போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் அதன் செயல்முறை விளக்கங்கள், தொடர்ச்சியான போக்குவரத்து விதிமீறல்களை அடையாளம் காண்பது, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டங்கள் மற்றும் சாலை விதிகள், ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகியவை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி சைபர் கிரைம் எஸ்ஐ அச்சுதன், தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ சங்கர் கணேஷ், கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மோசஸ் பவுல், தூத்துக்குடி 108 அவசர ஊர்திகள் ஒருங்கிணைப்பாளர் அருள்குமார், வஉசி பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜகுமார், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்ற அரசு உதவி வழக்கறிஞர் செய்யது அலி பாத்திமா, மாவட்ட கலெக்டர் அலுவலக தேசிய தகவல் மைய அதிகாரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கங்களுடன் விரிவாக பயிற்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து டிஐஜி மூர்த்தி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயிற்சி அளித்த அனைவருக்கும் கேடயங்கள் வழங்கியும், இந்த வகுப்பில் பங்கு பெற்ற காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி அறிவுரைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பிகள் ஆறுமுகம், தீபு, சகாய ஜோஸ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

The post நெல்லை சரக போலீசாருக்கு சாலை பாதுகாப்பு பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai Saraka police ,Thoothukudi District Police Office ,DIG Murthy ,SP Albert John ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி