சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர் கூறியதாவது: 2024-25ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இந்த மாமன்றத்தின் முன் சமர்ப்பிக்கிறேன். துணை கோரிக்கைகளை விளக்கி மானிய கூறும் விரிவான அறிக்கையினை முன் வைக்கின்றேன். இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.19,287.44 கோடி நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், ரூ.12,639.36 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.6,429.20 கோடி மூலதன கணக்கிலும், ரூ.218.88 கோடி கடன் கணக்கிலும் அடங்கும். 2024ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி 2024-25ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், “புதுப்பணிகள்” மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்ற மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்ற பேரவையின் ஒப்புதலை பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, துணை மதிப்பீடுகளில் நிதியொதுக்கம் தேவைப்படும் இனங்கள் பின்வருமாறு:
* “உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை)”, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிதி உயர்த்துவதற்கும், நிலைத்தன்மையை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பங்கு மூலதன உதவியாக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* “ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை”, கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* “எரிசக்தி துறை”, செலுத்த மின் நிறுவனங்களுக்கு வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* “போக்குவரத்து துறை” பேருந்துகள் வாங்குவதற்காக மாநில போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* “இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு”, 2024ம் ஆண்டில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் பெய்த கனமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளின் துயர் தணிப்பு பணிகளுக்காக ரூ.901.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 2024-25ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகின்றேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
* தமிழகம் முழுவதும் ஊர்ப்புற நூலகங்கள் உள்பட 821 நூலகங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது: அமைச்சர் தகவல்
பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக) பேசுகையில் “ நூலகம் கட்ட வழங்கப்பட்ட காலிமனையை பொள்ளாச்சி நகராட்சியிடமிருந்து பெற்று மாவட்ட நூலகத்திற்க்கு வழங்க அரசு ஆவன செய்யுமா?.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: தமிழகம் முழுவதும் ஊர்புற நூலகங்கள், கிளை நூலகம் என்று 821 நூலகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்திற்கு பெருமை தேடித்தரும் வகையில் பெரியார் பெயரில் மிகப்பெரிய நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எங்கெல்லாம் நூலகம் கட்டி தரமுடியுமோ அங்கெல்லாம் நாங்கள் கட்டித்தர தயாராக இருக்கிறோம்” என்றார்.
The post 2024-25ம் ஆண்டிற்கான துணை நிலை பட்ஜெட்டுக்கு ₹19,287 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் தகவல் appeared first on Dinakaran.
