×

தமிழ்வழி படித்தவர்களை அவதூறாக பேசிய நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், மார்ச்21: தமிழ் வழியில் படித்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தஞ்சையில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு கரந்தை தமிழ்ச்சங்கம்மற் றும் அனைத்து தமிழ்அமை ப்புகள், மாணவ, மாணவிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரந்தை தமிழ்ச் சங்கம் செயலாளர் சுந்தரவதனம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாடாளு மன்றத்தில் தமிழ்மொழி மற்றும் தமிழ் வழி படித்தவ ர்கள் குறித்து அவதூறாக பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் துரை சிங்கம், கரந்தை கலைக்கல்லூரி முதல்வர் ராஜாமணி, தமிழ் புலவர் கந்தசாமி, திருவையாறு அவ்வை கோட்டம் கலைவேந்தன், ஏடகம் அமைப்பின் உறுப்பினர் ஜெயக்குமார், புலவர் திருநாவுக்கரசு, தமிழ் கலை பண்பாட்டு துறை முன்னாள் துணை இய க்குனர் குணசேகரன், காவிரி உரிமை மீட்பு குழு துரை.ரமேசு மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post தமிழ்வழி படித்தவர்களை அவதூறாக பேசிய நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Thanjavur ,Union Minister ,Karandhai Tamil Sangam ,Thanjavur Head Post Office ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா