×

புதுச்சாவடி அரசு பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆய்வு

 

ஜெயங்கொண்டம், மார்ச் 21: புதுச்சாவடி அரசு பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக முதல்வரின் சிறந்த திட்டங்களுள் ஒன்றான பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட செயல்பாடுகளை ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத் ஆய்வு மேற்கொண்டார்.

காலை உணவின் தரம் சுகாதாரம் சுவை ஆகியவற்றை ஆய்வு செய்து பள்ளி மாணவர்களிடம் காலை உணவு பற்றி கேட்டறிந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி உப்புமா காய்கறி சாம்பார் சாப்பிட்டு பொறுப்பாளர் வாசுகி சமையலர்கள் சங்கீதா, லதா ஆகியோர்களை பாராட்டினர். தொடர்ந்து உணவு சமைத்தலின் போது சுத்தம் சுகாதாரம் மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அனைத்து மாணவர்களும் காலை, மதிய உணவு பள்ளியிலேயே சாப்பிட வேண்டும் எனவும் செல்போன்களை தேவையின்றி யாரும் பயன்படுத்தக் கூடாது , வெளியில் சுகாதாரமற்ற உணவு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி கல்வியில் சாதனை புரிந்து அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி பேசினார். பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

The post புதுச்சாவடி அரசு பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Jayankondam Tahsildar ,Chief Minister ,Puduchavadi Government School ,Jayankondam ,Jayankondam Tahsildar Sampath ,Tamil Nadu ,Puduchavadi Panchayat Union Middle School ,Jayankondam Union ,Ariyalur District… ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி