×

சேதுபாஸ்கரா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

காரைக்குடி, மார்ச் 21: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி தாளாளர் முனைவர் சேதுகுமணன் வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் விஷ்ணுப்பிரியன் தலைமை வகித்தார். சேது வள்ளியம்மாள் அறக்கட்டளை அறங்காவலர் விவேகானந்தன், பாஸ்கரா பில்டர்ஸ், சென்னை சோகா இகெதா மகளிர் கலைக்கல்லூரி துணை முதல்வர் முனைவர் கண்மணி சுப்பிரமணியன், கல்லூரி செயலாளர் கந்தப்பழம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

10க்கும் மேற்பட்ட வேளாண் இடுபொருள் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நேர்காணல் செய்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. வேளாண் கல்லூரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முனைவர் கவியரசு நன்றி கூறினார்.

The post சேதுபாஸ்கரா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Sethubhaskara College ,Karaikudi ,Sethubhaskara Agricultural College ,Research Institute ,Visalayankottai ,Kalam Kavi Gram ,College Principal ,Dr. ,Sethukumanan ,Vishnupriyan ,Sethu Valliammal… ,Dinakaran ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி துப்பாக்கி...